செவ்வாய், 2 நவம்பர், 2021

பாதியைப் பற்றினால் பட்டினியே

*பாதியைப் பற்றினால் பட்டினியே*

By : Eddy Joel Silsbee

 

சர்வ சிரிஷ்டிக்கும் அநுதின போஜனத்தை அளிக்கும் தேவன் தாமே நம்மை நினைத்தருள்வாராக.

 

ஊழியமோ, வேத வாசிப்போ, ஆத்தும ஆதாயமோ, ஜெபமோ, தொழுகையோ, காணிக்கைக் கொடுக்கும் பழக்கமோ பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் கிடையாது. அந்த வாய்ப்பும் அவைகளுக்கு இல்லை.

 

காலையில் எழுந்ததும் பறந்தும் அலைந்தும் திரிகிறது.

பல இடங்களுக்கு சென்று மீண்டும் மாலையில் தன் இடத்திற்கு திரும்பிவிடுகிறது. எந்த பறவையும் மிருகமும் பசி என்று இரவில் வயிற்றை பிசைந்து கொண்டு கதறுவதில்லை. சகலத்திற்கும் அதினதின் தேவை அனுதினமும் பூர்த்தி செய்யப்படுகிறது.

 

அவைகளுக்குத் தேவையான அன்றாட உணவைப் பூர்த்தி செய்வதாக ஆண்டவர் சொல்கிறார். மத். 6:25-32

 

வெறுமனே சுற்றிக்கொண்டிருக்கும் அவைகளைவிட ஊழியத்தையும், தொழுகளையும், ஜெபங்களையும் எப்போதும் தேவனை நோக்கி ஏறெடுக்கும் நம்மை அவர் கவனிக்காமல் இருப்பதெப்படி என்று நம்மிடம் கேட்கிறார்? மத். 6:32

 

ஆகவே அன்றாட தேவைகளைக் குறித்த பயமின்றி அந்தந்த நாளே நம்முடையதை நமக்கு வழங்கும் என்பதை மனதில் வைத்து கவலையற்றிருப்போம். அனைத்தும் அவசியப்படி நிறைவேறும். மத். 6:34

 

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்ற வசனத்தை மாத்திரம் படித்து திருப்திக்கொள்ளாதிருங்கள்... அந்த வசனத்தை *முழுமையாய் வேதத்தில் வாசித்து* அதன் முதல்வரியில் உள்ளவற்றை *கடைபிடிக்கும் போது* தேவன் நம்மை கைவிடுவதில்லை !! எபி. 13:5

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/0gj6B8Ad_gk

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக