திங்கள், 29 நவம்பர், 2021

#1118 - இயேசுவின் வம்சாவழியில் யோசேப்பின் அவசியம் ஏன்?

#1118 - *இயேசுவின் வம்சாவழியில் யோசேப்பின் அவசியம் ஏன்?*

இயேசு இவ்வுலகில் வருவதற்கு ஒரு கன்னி (மரியாள்) தேவைப்பட்டது புரிகிறது. ஆனால் இந்த மரியாள்; யோசேப்புவைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட சூழ்நிலையின் போது ஏன் தேவன் மரியாளை தேர்ந்தெடுக்கவேண்டும்? அப்படியென்றால் இயேசுவின் இவ்வுலக வாழ்வில் மரியாளின் கணவரான யோசேப்பின் பங்கும் அவசியப்பட்டதா? விளக்கவும்.

*பதில்* : இப்படியொரு ஒரு கேள்வி எனக்கு உண்மையிலேயே பெரிய சவாலாகவேயிருந்தது.

மறைவானவைகள் தேவனுக்குரியவைகள் என்று உபா. 29:29ஐ உங்களுக்கு என் பதிலாக சொல்ல என் மனம் இடங்கொடுக்காததால் சுமார் ஐந்து நாட்களாக கசக்கி பிழந்ததில் கீழ்கண்ட பதிலை எழுதுகிறேன். இந்த கேள்வியை என்னிடம் கேட்டமைக்காய் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இயேசுவின் பிறப்பைப் பற்றிய லூக்காவின் பதிவில், மரியாளின் வம்சவரலாறு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது (லூக்கா 3:23-38).

இயேசு "ஏலியின் மருமகனான யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்."
(எப்படி ஏலியின் மருமகன் (?) என்ற விபரமறிய Q&A பதில் எண் #798ஐ காணவும்)

தொடர்ந்து லூக்காவின் வம்சவரலாறு தாவீது, ஆபிரகாம் மற்றும் ஆதாம் வரை தொடர்கிறது. இது தாவீதின் பௌதிக சந்ததியாக மரியாளை நிறுவுகிறது.  அப்படியாக தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசு "தாவீதின் மகன்" எனப்படுகிறார்.

மத்தேயுவின் பதிவில் (மத். 1:1-16), யோசேப்பின் வம்சத்தை தாவீதின் சிம்மாசனத்திற்கு தொடர்புபடுத்துவது; நியாயபிரமாணத்தின்படி இயேசுவின் சட்டப்பூர்வ உரிமையை இது நிரூபிக்கிறது.

யோசேப்பின் வளர்ப்பு மகனான இயேசு, யூத மதத்தின் படி ஒரு உயிரியல் வாரிசுக்கான (biological heir) அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளையும் பெற்றிருப்பார்.

யோசேப்பு சாலமோன் மூலமாக தாவீதின் வழிவந்தவர். ஆகவே, தாவீதின் வம்சத்தில் ஒருவர் இராஜாவாக தேர்ந்தெடுக்கப்படும் வரிசையில் கருதப்பட ஏதுவாகிறது.

எனவே, கர்த்தராகிய இயேசு;
*மரியாள் மூலமாக தாவீதின் குமாரனாகவும், யோசேப்பு மூலமாக சட்டப்பூர்வ உரிமையால் இஸ்ரவேலின் ராஜாவாகவும் இருக்கிறார்*.

மிக ஆச்சரியமான மற்றும் ஆழமான அல்லது அற்புதமான ஒரு காரியத்தை இதில் நாம் புரிந்துக்கொள்ளும் பகுதி என்னவென்றால்;
சாலொமோனின் வம்சாவளியில் இராஜாவாகப் பெயரிட முடியாதபடிக்கு (உயிரியல்/biological) தேவன் கோனியாவைப் பற்றி சபித்திருந்தார் எரேமியா 22:30 கூறுகிறது.

“எரே. 22:30 இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

தாவீதின் வம்சத்தில் சாலமோனின் வழித்தோன்றல் மட்டுமே ராஜாவாக முடியும் என்றபோதிலும் இந்த வரிசை சபிக்கப்பட்டும் இருக்கும் சூழலில், தாவீதின் உடன்படிக்கையை இயேசு மட்டுமே நிறைவேற்ற முடிகிறது.

யோசேப்பு மூலம் ராஜாவாகும் உரிமை இயேசுவுக்கு இருந்தது.

ஆனால் அவர் கன்னியின் வயிற்றில் பிறந்ததால், கோனியாவின் சாபம் அவருக்குப் பொருந்தவில்லை.

ஆகவே, மரியாள் வழியாக அவர் தாவீதின் குமாரன்.
யோசேப்பு வழியாக தாவீதின் சிங்காசனத்திற்கு நியாயபிரமாணத்தின்படியான இஸ்ரவேல் இராஜா என்ற நிலை வந்தது.

கர்த்தராகிய இயேசுவை உண்மையான தாவீதின் இராஜாவாக நிறுவுவதில் இரண்டு வம்சாவளிகளும் குறிப்பிடத்தக்கவை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக