வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

காட்டையே அழிக்கும் சிறிய தீக்குச்சி

*காட்டையே அழிக்கும் சிறிய தீக்குச்சி*

by : Eddy Joel Silsbee

 

அன்பின் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

முக்கியமானவைகளையும், மிருதுவானதயும் பத்திரமாக கையாளவேண்டும். முரட்டுத்தனமான கையாடல் அவைகளை இழக்கச் செய்யும்.

 

அதுபோலவே,

இரத்தம்,

இருதயம்,

ஈரல்,

இரத்தத்தை கடத்திச்செல்லும் நரம்புகள்,

முதுகெலுப்பு,

மூளை, கண்கள் மற்றும் அனைத்து

முக்கியமான உறுப்புகளும்,

சரீரத்திற்கு வெளியே சுலபமாக தென்படாமல்,

தேவன் அவைகளை சரீரத்தில் மறைத்து பாதுகாப்புடன் வைத்திருக்கிறார். 

 

அவைகளில் ஏதாகிலும் ஒன்றில் சிறிய கோளாறு ஏற்பட்டு அதை உடனடியாக கவனிக்கத் தவறினால், மற்ற உறுப்புகள் எவ்வளவு ஆரோக்கியமாய் இருந்தாலும், முழு சரீரத்தின் இயக்கத்தையுமே பாதித்துவிடும்.

 

கிறிஸ்தவர்களாகிய நாம்,

கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருப்பதால்;

நம்முடைய சகோதரனோ, சகோதரியோ,

சிறியவரோ, பெரியவரோ,

முதியவரோ, இளையவரோ,

எவரையும் உதாசீனப்படுத்தாதபடிக்கு,

அவர்களது ஒடுக்கப்பட்டக் காரியங்களை

கவனியாமல் விடும்பட்சத்தில், முழு சபைக்கும் பாதிப்பைக் கொண்டுவரும். 1 Cor. 12:21-26

 

சிறிய தீக்குச்சிதானே என்று எரிந்துக்கொண்டிருக்கும் எந்த சிறிய நெருப்பையும் உதாசீனப்படுத்தினால் அது நிச்சயம் வளர்ந்து முழுக்காட்டையும் எரித்துவிடும் !

 

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் (சங் 22:24) என்ற வார்த்தைக்கு இணங்க நாமும் ஒருவரையும் உதாசீனப்படுத்தாமல் அனைவரையும் கனப்படுத்த வேண்டும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/BbQ9cZpjHjY

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக