*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 26 May 2021
by : Eddy Joel Silsbee
சோதனையை சகிக்க பெலன் தந்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
Temptation என்கிற வார்த்தைக்கு தமிழில்,
*சலனம்* என்றும் அர்த்தம்.
ஆனால் சோதனை என்றே நாம் பொதுவாக சொல்லிவிடுகிறோம்.
ஆசை வார்த்தை கூறி, பிசாசு நம்மை சலனப்படுத்தி பார்ப்பான்.
ஆதாமும் ஏவாளும் அதில் விழுந்து போனார்கள்.
அனனியாவும் சப்பிராளும் அதற்கு பலியானார்கள்.. அப். 5:3
ஆனால், *இயேசுவிடமோ அந்த முயற்சி பலிக்கவில்லை* (மத். 4:3).
ஆசைக் காட்டப்படுவதால் நாம் தூண்டப்படுகிறோம்.
அதில் *விழுந்து விடாமல் நம்மை காத்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது*.
தேவன் நமக்கு அனுமதித்ததையும், கொடுத்ததையும்;
நேர்த்தியாய் பாதுகாத்து, பத்திரமாக, சரியாக இருக்கிறோமா என்று நம் *விசுவாசத்தை பரிசோதிக்கப்படுவதுவே சோதனை*.
கொஞ்சத்திலே இவன் உண்மையாய் நடந்து கொண்டான்...
ஆகவே இவனுக்கு இன்னும் கொஞ்சம் கூட்டிவழங்கலாம் என்று தேவன் நம்மை மேலும் ஆசீர்வதிப்பார்.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1தீமோ. 6:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக